சனி, 2 ஜூலை, 2016

அருள்மிகு பாஸ்கரேஸ்வரர் திருக்கோவில்


கோவில் பெயர்   : அருள்மிகு பாஸ்கரேஸ்வர திருக்கோவில்

சிவனின் பெயர்   :  பாஸ்கரேஸ்வரர், பரிதியப்பர்

அம்மனின் பெயர் :   மங்களாம்பிகை

தல விருட்சம்     :   அரசு

கோவில் திறக்கும் நேரம் :   காலை 6.30 மணி முதல் 12.30 மணி வரை, 
                                                  மாலை  3.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை. 

முகவரி : அருள்மிகு பாஸ்கரேஸ்வரர் திருக்கோவில், பரிதியப்பர்கோவில் (பரிதி நியமம்)-614 904.ஒரத்தநாடு.Ph:0 4372-256 910 

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 164 வது தேவாரத்தலம் ஆகும்.

இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். 

* லிங்கத்திற்கு சூரியபகவான் ஆண்டுதோறும் பங்குனி 18,19,20 தேதிகளில் தன் கதிர்களை வீசி சூரிய பூஜை செய்கிறான். சிவன் எதிரில் சூரியபகவான் நின்று சிவதரிசனம் செய்யும் கோலம் வேறு எங்கும் காண இயலாது. 3 சண்டிகேஸ்வரர் பிரகாரத்தில் அருள்பாலிக்கின்றனர். சிவனின் பின்புறம் கோஷ்டத்தில் மகாவிஷ்ணுவும் ஆஞ்சநேயரும் அருகருகே அருள்பாலிப்பது சிறப்பு.


* இத்தலத்தில் சூரியனுக்கு தோஷம் நிவர்த்தி ஆனதால், இது பிதுர் தோஷ பரிகார தலமாக விளங்குகிறது

* ஜாதகரீதியாக எந்த கிரகத்தினாலும் பிதுர் தோஷம் ஏற்பட்டாலும் இத்தலத்தில் பரிகாரம் செய்யலாம். மேலும் கார்த்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரங்களில் பிறந்தவர்கள், சூரிய திசை நடப்பவர்கள், சிம்ம லக்னம், சிம்மராசியில் பிறந்தவர்கள், சித்திரை, ஆவணி, ஐப்பசி மாதங்களில் பிறந்தவர்கள், தமிழ் மாதத்தின் முதல் தேதியில் பிறந்தவர்கள் ஆகியோர் தமிழ் மாத வளர்பிறையில் வரும் முதல் ஞாயிற்று கிழமையில் சிவனையும் சூரியனையும் வழிபட்டால் அவர்களுக்குள்ள தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: