கோவில் பெயர் : அருள்மிகு மகாகாளேஸ்வரர் திருக்கோவில்
சிவனின் பெயர் : மகாகாளேஸ்வரர்
அம்மனின் பெயர் : குயில்மொழி நாயகி
தல விருட்சம் : புன்னை
கோவில் திறக்கும் : காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி : அருள்மிகு மகாகாளேஸ்வரர் திருக்கோவில், இரும்பை-605 010, ஆரோவில், விழுப்புரம் மாவட்டம்.0413 - 268 8943, 98435 26601.
கோவில் சிறப்பு :
* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.
* இது 265 வது தேவாரத்தலம் ஆகும்.
* இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கருவறையில் லிங்கம் மூன்று பாகங்களாக பிளந்து, மூன்று முகங்களுடன் இருக்கிறது. இம்மூன்று பாகங்களையும் ஒரு செம்பு பட்டயத்தில் கட்டி வைத்து பூஜைகள் செய்கின்றனர். இம்முகங்கள் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளை குறிப்பதாகச் சொல்கிறார்கள். சிவனின் இந்த மும்மூர்த்தி தரிசனம் மிகவும் அபூர்வமானது.
* ஆயுள் விருத்தி பெற இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள். உண்மையுடன் நடந்தும் அவப்பெயர் எடுத்தவர்கள், அவப்பெயர் நீங்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
0 Comments: