கோவில் பெயர் : அருள்மிகு மாசிலாமணீஸ்வரர் திருக்கோவில்
சிவனின் பெயர் : மாசிலாமணீஸ்வரர்
அம்மனின் பெயர் : கொடியிடை நாயகி
தல விருட்சம் : முல்லை
கோவில் திறக்கும் : காலை 6.30 மணி முதல் 12மணி வரை, மாலை4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்
முகவரி : அருள்மிகு மாசிலாமணீஸ்வரர் திருக்கோவில், வட திருமுல்லை வாயில், சென்னை - 609 113. Ph:044- 2637 6151
கோவில் சிறப்பு :
* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.
* இது 255 வது தேவாரத்தலம் ஆகும்.
* இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார், இத்தலத்தில் உள்ள சுயம்புலிங்கம், தலையில் வெட்டுப்பட்ட தடத்துடன் காட்சி தருகிறார். வெட்டுப்பட்ட காயத்தை குளிர்விக்கும் வகையில், ஆண்டு முழுவதும் சந்தனக்காப்பு அலங்காரத்துடன் அருளும் இவர், சித்திரை மாத சதய நட்சத்திரத்தில் இரண்டு தினங்கள் மட்டும் சந்தனக்காப்பு இல்லாமல் நிஜ திருமேனியுடன் காட்சி தருகிறார். அந்நேரத்தில் இவரை வழிபட்டால் பாவங்கள் நீங்கப்பெற்று, முக்தி பெறலாம் என்பது நம்பிக்கை. இவருக்கு அபிஷேகம் இல்லாததால், ஒரு பாதரசலிங்கத்தை தனிச்சன்னதியில் வைத்து பூஜிக்கிறார்கள்.மூலவரின் விமானம் கஜப்பிருஷ்ட (யானையின் பின்பகுதி) அமைப்புடையது.
* பவுர்ணமி, அமாவாசை, கிருத்திகை, பிரதோஷம் ஆகிய நேரங்கள் தவிர்த்த பிற நேரங்களில் இங்குள்ள நந்திக்கு பூஜை செய்து சாத்திய மாலையை அணிந்து கொண்டால் திருமணத்தடை, புத்திரதோஷம் நீங்கும் என்பது ஐதீகம்
0 Comments: