சனி, 9 ஜூலை, 2016

அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோவில்

கோவில் பெயர்   : அருள்மிகு முக்தீஸ்வரர்  திருக்கோவில்

சிவனின் பெயர்   : முக்தீஸ்வரர் 

அம்மனின் பெயர் : மரகதவல்லி

தல விருட்சம்   : வில்வம்

கோவில் திறக்கும் நேரம் :   காலை 6 மணி முதல் 11 மணி வரை,
                              மாலை  4 மணி முதல் இரவு 8.30  மணி வரை.

முகவரி : அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோவில்,தெப்பக்குளம் - 625 009. மதுரை.Ph:0452-234 9868, 234 4360



கோவில் சிறப்பு :

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* பெரும்பாலான சிவாலயங்களில் வருடத்தில் சில விநாடிகள் மட்டும், சூரியன் தனது ஒளிக்கிரணங் களால் சுவாமியை பூஜை செய்வார். ஆனால், இங்கு மார்ச் 10 முதல் 21 வரை, செப்டம்பர் 19 முதல் 30 வரையில், 24 நாட்கள் தொடர்ச்சியாக சூரியன் பூஜை செய்கிறார்.

* இங்குள்ள தலவிநாயகர் சித்தி விநாயகர். இறந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக விநாயகர் சன்னதியில் வழிபாடு நடத்தலாம். இதன் மூலம் அவர்கள் கண்ட கனவை நனவாக்கலாம் என்ற நம்பிக்கை நிறைவேற மதுரை முக்தீஸ்வரர் கோயிலில் உள்ள வில்வமரத்தடி விநாயகர் சன்னதியில் வழிபாடு செய்யலாம்.

* இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடையவும், கண்ட கனவுகள் நிறைவேறவும், எண்ணிய செயல்கள் நடைபெறவும் இங்குள்ள இரண்டு வில்வமரங்களில் வடமேற்கே உள்ள வில்வமரத்தின்கீழ் உள்ள விநாயகரிடம் பிரார்த்தனை செய்கிறார்கள்.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: