வியாழன், 28 ஜூலை, 2016

அருள்மிகு சிவாநந்தீஸ்வரர் திருக்கோவில்

கோவில் பெயர்   : அருள்மிகு சிவாநந்தீஸ்வரர் திருக்கோவில்

சிவனின் பெயர்   : சிவாநந்தீஸ்வரர்

அம்மனின் பெயர் :  ஆனந்தவல்லி

தல விருட்சம்     :   கள்ளி

கோவில் திறக்கும் : காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும் .   

முகவரி : அருள்மிகு சிவாநந்தீஸ்வரர் திருக்கோயில், திருக்கண்டலம்- 601 103. ஊத்துக்கோட்டை தாலுகா, திருவள்ளூர் மாவட்டம்
Ph:044 - 2762 9144. +91- 99412 22814

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 251 வது தேவாரத்தலம் ஆகும்.

* இக்கோயிலில் சிவன், சக்தி தெட்சிணாமூர்த்தியாக தனிச்சன்னதியில் இருக்கிறார். இவர் இடது கைகளில் அமுத கலசமும், ஏடும் ஏந்தி அம்பாளை அணைத்தபடி காட்சி தருகிறார். அருகில் பிருகு முனிவர் அவரை வணங்கியபடி இருக்கிறார்ந்தன் தளி கோயிலிலும் அம்மன் இல்லை.

* பிரிந்திருக்கும் தம்பதியர்கள் தெட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் கள்ளி மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். திருமணத்தடைகள் நீங்கும், வறுமை நீங்கி செல்வசெழிப்பு உண்டாகும் என்பது நம்பிக்கை

* பொன் பொருள் வேண்டுபவர்கள், சுந்தரர் இத்தலத்தில் பாடிய பாடலை பாடினால் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
                
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: