செவ்வாய், 12 ஜூலை, 2016

அருள்மிகு சிவலோகநாதர் திருக்கோவில்



கோவில் பெயர்   : அருள்மிகு சிவலோகநாதர் திருக்கோவில்

சிவனின் பெயர்   :  சிவலோக நாதர், முண்டீச்சுரர், முடீசுவரர் 

அம்மனின் பெயர் :  சவுந்தர்யநாயகி, கானார்குழலி, செல்வாம்பிகை

தல விருட்சம்     :   வன்னிமரம்

கோவில் திறக்கும் : காலை 6 மணி முதல் 10 மணி வரை, 
மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை         

முகவரி : அருள்மிகு சிவலோகநாதர் திருக்கோவில், கிராமம் (திருமுண்டீச்சரம்) - 607 203. உளுந்தூர்பேட்டை வட்டம், விழுப்புரம் மாவட்டம்.Ph:0 4146-206 700.

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 230 வது தேவாரத்தலம் ஆகும்.

* இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பிரம்மா, இந்திரன் வழிபாடு செய்த தலம். தெட்சிணாமூர்த்தி கல்லால மரத்தின் கீழ் அமராமல் ரிஷப வாகனத்தில் அருள்பாலிக்கிறார். திண்டி, முண்டி இருவருக்கும் இங்கு சிலை உள்ளது.

* இங்குள்ள விநாயகர் வரசித்தி விநாயகர். கிழக்கு நோக்கிய ராஜகோபுரம். நுழைவு வாசலில் விநாயகரும், முருகனும் இடம் மாறியுள்ளனர். முருகனின் இடது கை நாரச முத்திரையுடன் உள்ளது. கோயிலின் அமைப்பு சோமாஸ்கந்தர் அமைப்பில் உள்ளது. சிவன் சன்னதிக்கும் அம்மன் சன்னதிக்கும் நடுவில் முருகன் சன்னதி அமைந்துள்ளது. பிரகாரத்தில் விநாயகர், முருகன், நடராஜர், தெட்சிணாமூர்த்தி, நவக்கிரகம், ஐயனார், துர்க்கை சன்னதிகள் உள்ளன.

* நடனத்திலும், இசையிலும் ஆர்வமுள்ளவர்கள் இத்தல அம்மனை வழிபாடு செய்கிறார்கள்.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: