கோவில் பெயர் : அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோவில்
சிவனின் பெயர் : சுந்தரேஸ்வரர்
அம்மனின் பெயர் : பாகம்பிரியாள்
தல விருட்சம் : வில்வம்
கோவில் திறக்கும் நேரம் : காலை 7 மணி முதல் 11 மணி வரை,
மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை.
முகவரி : அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோவில்,துர்வாசபுரம்-622 409. புதுக்கோட்டை மாவட்டம்.Ph:04333 - 276 412, 276 467, 94427 62219.
கோவில் சிறப்பு :
* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.
* இங்கு மூலவர் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
* இங்குள்ள விநாயகர் அனுக்ஞை விநாயகர். சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தியின் கீழ் முயலகன் இடப்புறம் திரும்பியிருக்கிறான். முன்மண்டபத்தில் சனீஸ்வரர் மேற்கு நோக்கி இருக்கிறார். அருகருகில் சூரியன், சந்திரன், சப்தகன்னியர், பீட வடிவில் கருப்பசாமி இருக்கின்றனர். நவக்கிரகம், துர்க்கை சன்னதி, ராஜகோபுரம் இல்லை. கோயில் நுழைவுவாயில் கூடாரம் போன்ற அமைப்பில் இருக்கிறது.
* கல்வி, பணியில் சிறக்கவும், குழந்தை பேறுக்காகவும் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.
0 Comments: