கோவில் பெயர் : அருள்மிகு திருமேனிநாதர் திருக்கோவில்
சிவனின் பெயர் : திருமேனிநாதர், சுழிகேசர்
அம்மனின் பெயர் : துணைமாலையம்மை, சகாயவல்லி, சொர்ணமாலை,
தல விருட்சம் : அரசு, புன்னை
கோவில் திறக்கும் நேரம் : காலை 5 மணி முதல் 12 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை.
முகவரி : அருள்மிகு திருமேனிநாதர் திருக்கோவில், திருச்சுழி அஞ்சல், விருதுநகர் மாவட்டம். Ph:04566-282 644
கோவில் சிறப்பு :
* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.
* இது 202 வது தேவாரத்தலம் ஆகும்.
திருச்சுழியல் பெரிய ஊர். தேரோடும் நான்கு வீதிகள் சூழத் திருக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. பிள்ளையாரை வழிபட்டு ஆலயத் திருவாயிலுள் நுழைந்தால் எதிரே அம்பாள் சன்னதி. வலதுபுறம் சுவாமி சன்னதிக்கு எதிரே கவ்வைக்கடல் தீர்த்தம் உள்ளது. அருகே ஆஸ்தான மண்டபம் உள்ளது. முதலாவதாகக் காணப்படும் கம்பத்தடி மண்டபத்தில் கொடிமரம் நந்தி பலிபீடங்கள் உள்ளன.
* திருவாயிலின் இருமருங்கிலும் விநாயகர், முருகன் உள்ளனர். சுவாமி சன்னதியிலுள்ள ராஜகோபுரம் ஏழுநிலைகளுடன் கூடியது. வாயிலில் உள்ள அதிகாரநந்தி தேவரை வணங்கி உள்ளே சென்றால் அறுகாற்பீடம் காணப்படுகிறது.
* இத்தலத்திருப்பதிகக் கல்வெட்டு உள்ளது. அடுத்து சபாமண்டபம், அந்தாரளமண்டபம், அர்த்த மண்டபங்கள் உள்ளன. மூலலிங்கப் பெருமானாகிய திருமேனிநாதர் சுயம்புலிங்கமாகக் கருவறையில் காட்சி தருகிறார். வழிபட்டு வெளியில் சபாமண்டபத்தில் சிலை வடிவில் விளங்கும் நடராஜரைத் தரிசித்து வெளியே வந்து முதல் திருச்சுற்றை அடையலாம். கிழக்கே சூரியன் தெற்கே அறுபத்து மூவர், சப்தமாதர்கள் உள்ளனர். தென்மேற்கில் விநாயகர், மேற்கில் சோமாஸ்கந்தர், விசுவநாதர், விசாலாட்சி, சுழிகைக் கோவிந்தர், வடமேற்கில் முருகன் ஆகியோர் எழுந்தருளியுள்ளனர். வடக்கே சண்டேசர் கோயில் உள்ளது. வடகிழக்கே நடராசப் பெருமானும் கிழக்கே காலபைரவர், சந்திரன் ஆகியோரும் விளங்குகின்றனர். கருவறையைச் சார்ந்த சோஷ்டங்களில் தெற்கே தட்சிணாமூர்த்தி, மேற்கே லிங்கோத்பவர், வடக்கே துர்க்கை ஆகியோர் உள்ளனர். அடுத்து கோயிலின் தென்பால் இறைவனுக்கு வலது பாகத்தில் விளங்கும் அம்பாள் கோயிலை அடைவோம். நந்திபலிபீடங்களை வழிபட்டு உள்ளே சென்றால் திருப்பள்ளியறை மண்டபம் காணப்படும். அடுத்து அர்த்த மண்டபமும் கருவரையும் உள்ளன. இது ராமநாதபுரம் சேது சமஸ்தானத்தைச் சேர்ந்த கோயில்களில் ஒன்று.
* திருமணத்தில் தடை உள்ளவர்கள் திருமணக்கோலத்தில் உள்ள இறைவனை வணங்கி பலனடைகின்றனர்.
0 Comments: