சனி, 9 ஜூலை, 2016

அருள்மிகு விருத்தபுரீஸ்வரர் திருக்கோவில்



கோவில் பெயர்   : அருள்மிகு  விருத்தபுரீஸ்வரர்  திருக்கோவில்

சிவனின் பெயர்   : விருத்தபுரீஸ்வரர் (பழம்பதிநாதர்)

அம்மனின் பெயர் : பெரியநாயகி

தல விருட்சம்     : புன்னை, சதுரகள்ளி, மகிழம், குருந்த மரம்

கோவில் திறக்கும் நேரம் :   காலை 6 மணி முதல் 11.30 மணி வரை,
                              மாலை  4 மணி முதல் இரவு 7.30  மணி வரை.

முகவரி : அருள்மிகு விருத்தபுரீஸ்வரர் (பழம்பதிநாதர்)திருக்கோவில், திருப்புனவாசல்-614 629. புதுக்கோட்டை மாவட்டம்.Ph:04371-239 212, 99652 11768


கோவில் சிறப்பு :

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* 197 தேவாரத்தலம் ஆகும்.

* வைகாசி விசாகத்தன்று மூலவரின் மீது சூரிய ஒளிக்கதிர்கள் பட்டு சூரியபூஜை நடக்கிறது. தஞ்சையை விட பெரிய ஆவுடை உள்ள கோயில். இவ்வளவு பெரிய ஆவுடையை வேறு எந்த கோயிலிலும் பார்க்க முடியாது. இதுவே இத்தலத்தில் மிகச்சிறந்த சிறப்பம்சமாகும்.

* இத்ததல விநாயகர் ஆகண்டல விநாயகர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். இவ்வூர் கோயிலுக்கு தெற்கே பாம்பாறும், கோயில் எதிரே 3 கி.மீ. தொலைவில் கடலும் உள்ளது. கடல் மற்றும் ஆற்றின் புனலில்(வாயிலில்) ஊர் இருப்பதால் "திருப்புனவாசல்' என்ற பெயர் ஏற்பட்டது. 65 அடி உயரத்தில் கிழக்கு நோக்கிய ராஜகோபுரமும், கோயிலின் வெளியே பிரம்ம தீர்த்தமும் அமைந்துள்ளது. பெயரளவுக்கே தற்போது தீர்த்தம் உள்ளது) கோயிலின் சுற்றுப்பகுதியில், பஞ்ச விநாயகர், கபிலரின் 9 குமாரர்கள், ஆதி சிவனடியார்கள், தெட்சிணாமூர்த்தி, தல விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், பிரம்மா, சண்டிகேஸ்வரர், கஜலட்சுமி சன்னதிகள் உள்ளன. சிவனுக்கு இடப்புறம் அம்மன் கிழக்கு நோக்கி தனி சன்னதியில் அருளுகிறாள். அம்மனுக்கு எதிரில் குடவரை காளி சன்னதி உள்ளது.

* குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் தொட்டில் கட்டும் வழக்கமும், செவ்வாய்க்கே தோஷம் போக்கிய இத்தலத்தில் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வழிபட்டால் உடனடி பலன் கிடைக்கும் என்கிறார்கள்.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: