வெள்ளி, 1 ஜூலை, 2016

அருள்மிகு தியாகராஜர் திருக்கோவில்


கோவில் பெயர்   : அருள்மிகு தியாகராஜர் திருக்கோவில்

சிவனின் பெயர்   : தியாகராஜர், வன்மீகநாதர், புற்றிடங்கொண்டார்

அம்மனின் பெயர் :  கமலாம்பிகை, அல்லியங்கோதை, நீலோத்பலாம்பாள்

தல விருட்சம்     :   பாதிரிமரம்

கோவில் திறக்கும் நேரம் :   காலை 5 மணி முதல் 12 மணி வரை, 
                                                     மாலை  4 மணி முதல் இரவு 9 மணி வரை. 

முகவரி : அருள்மிகு தியாகராஜர் திருக்கோவில், திருவாரூர் - 610 001, 
Ph:  04366 - 04366-242343,http://www.thiyagarajaswamytemple.tnhrce.in/



கோவில் சிறப்பு : 

*  1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

*  இது 150 வது தேவாரத்தலம் ஆகும்.

*  இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். 

*    பஞ்சபூத ஸ்தலங்களில் பூமிக்கான திருத்தலம் திருவாரூர்.

* இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் தியாகராஜர் முதலில் திருமாலால் திருப்பாற்கடலில் வழிபடப்பெற்றவர். பிறகு அவரால் இந்திரனுக்கும், பிறகு இந்திரனால் முசுகுந்த சக்கரவர்த்திக்கும் அளிக்கப்பெற்று, அந்த முசுகுந்த சக்கரவர்த்தியால் இவ்வூரில் பிரதிட்டை செய்யப்பெற்றவர்.

* திருவாரூர் கோவில் சிதம்பரம் கோவிலைவிட பழமையானது என்பதை குறிக்கும் வகையில் இங்கு பாடப்படும் தேவாரத்தில் திருச்சிற்றம்பலம் என்ற வார்த்தை குறிப்பிடப்படுவது இல்லை.

* தியாகராஜரின் தலவரலாறு இன்றும் அறியப்படவில்லை. இதற்கு சான்று ஞானசம்பந்தர் திருவாரூரில் கோவில் கொண்டது எந்நாளில் என 10 பாடல்களை பாடியுள்ளார்.

* நவகிரகங்கள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் நின்று தரிசனம் தரும் திருத்தலம்.

* எமனே சண்டிகேஸ்வரரை ஆட்கொண்டு எமபயம் போக்கும் திருத்தலம்.

* சுந்தரருக்காக (நால்வரில் ஒருவர் ) சிவனே வீதியில் நடந்துசென்று பெண் கேட்ட திருத்தலம்.

* கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் தோன்றிய திருத்தலம்.

* நமி நந்தி அடிகள் நீரினால் விளக்கு ஏற்றிய திருத்தலம் .

* பசுவிற்கு நீதிவழங்க தன் மகனை தேரின் சக்கரத்தில் இட்டு கொன்ற நீதிவழுவா மனுநீதி சோழன் வாழ்ந்த திருத்தலம்.

* 24 உட்கோவில்களையும், 365 சிவலிங்ககளையும், 86 விநாயக சிலைகளையும் கொண்ட திருத்தலம் திருவாரூர் ஆகும்.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: