கோவில் பெயர் : அருள்மிகு தெட்சிணாமூர்த்திசுவாமி திருக்கோவில்
கோவில் திறக்கும் : காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி : அருள்மிகு தெட்சிணாமூர்த்திசுவாமி திருக்கோயில், திருவொற்றியூர், சென்னை 600 019 திருவள்ளூர் மாவட்டம்.
Ph: 98407 97878.
கோவில் சிறப்பு :
* 1000 வருடங்களுக்கு முன் பழமையானது.
* வடக்கு நோக்கிய தெட்சிணாமூர்த்தி.தெட்சிணாமூர்த்திக்கென அமைந்த தனிக்கோயில் இது. வலது கையில் அக்னி, இடக்கையில் நாகம் வைத்து, காலுக்கு கீழே முயலகனை மிதித்தபடி சுவாமி காட்சி தருகிறார். பொதுவாக தெட்சிணாமூர்த்தியின் கீழே சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் என நான்கு சீடர்கள் மட்டுமே இருப்பர். ஆனால் இங்கு மூலவரின் பீடத்தில் 18 மகரிஷிகள் சீடர்களாக இருக்கின்றனர். இத்தகைய அமைப்பைக் காண்பது அபூர்வம். உற்சவர் தெட்சிணாமூர்த்தியின் பீடத்தில் யானை வணங்கியபடி அமைக்கப்பட்டிருக்கிறது
* வீடு கட்ட, புது நிலம் வாங்க விரும்புபவர்கள் கோயில் வளாகத்தில் கற்களை வீடு போல, அடுக்கி வைத்து வேண்டிக்கொள்கிறார்கள். கல்வி, கலை, இலக்கியம், இசை போன்ற துறைகளில் சிறப்பிடம் பெற இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். திருமணத்தடை நீங்க, ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் எலுமிச்சையில் நெய் தீபம் ஏற்றியும் வழிபடுகிறார்கள். தெட்சிணாமூர்த்தியிடம் வேண்டிக்கொள்பவர்கள் கொண்டை கடலை மாலை அணிவித்து, சன்னதி முன்பு நெய் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.
0 Comments: